Friday, July 25, 2008

முதல் ‘டெஸ்ட் டியூப்’ பேபி













உலகின் முதலாவது சோதனைக் குழாய் குழந்தையான லூஸி பிறவுண், தனது 30 ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

உலகங்குமுள்ள மில்லியன்கணக்கான குழந்தைகளற்ற தம்பதியினருக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் லூஸி பிறவுண், தனது கணவர் வெஸ்லி முலின்டர் மற்றும் 18 மாத குழந்தையான கமெரொன் ஆகியோருடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். இவர் 1978 ஆம் ஆண்டு ஜுலை 25 ஆம் திகதி இங்கிலாந்தின் ஓல்ட்ஹாமிலுள்ள மாவட்ட பொதுமருத்துவமனையில் பிறந்தார்.

Monday, July 14, 2008

மிஸ் யுனிவர்ஸ்

2008ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெனிசூலா நாட்டைச் சேர்ந்த 22 வயது அழகி டயானா மென்டோசா வென்றுள்ளார்.
கொலம்பியா நாட்டு அழகிக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
அழகிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு நடந்தபோது, மிஸ் அமெரிக்காவான கிரிஸ்டல் ஸ்டூவர்ட் கால் தடுமாறி, கீழே விழுந்துள்ளார்.
கடந்த ஆண்டு மெக்சிகோ சிட்டியில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியிலும் அப்போதைய மிஸ் அமெரிக்காவான ராச்செல் ஸ்மித்தும் இதேபோன்றுதான் கீழே தவறி விழுந்தார்.
என்னதான் சம்பிரதாயமோ!
சரி அது போகட்டும்
நீங்களும் 2009ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்துக்கு ட்ரை பண்ணுங்க...!

இதுதாங்க.... மகிழ்ச்சி.....

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை ஒட்டி தயாரிக்கப்பட்ட டிராகன் வடிவிலான பன்னாட்டு தேசிய கொடிகளை உலகப்புகழ் பெற்ற சீனப் பெருஞ்சுவரில் அலங்கரிக்கும் ஒலிம்பிக் தொண்டர்கள்.
நம்ம ஊர்லேயும் இப்படி ஒரு பெருஞ்சுவர் இருந்தால்....

என்ன செய்வோம்...

அதுமேல ஏறி உட்கார்ந்துட்டு சிகரெட் அடிக்கிறது, வெட்டி கதை பேசுறது...

அதுலயும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான செய்யுது.